காதலனை சென்னைக்கே அழைத்து வந்த ஸ்ருதிஹாசன்! பொது இடத்தில் ரொமான்டிக்!

3 years ago 426

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் தன்னுடைய 35வது பிறந்தநாளை புதிய காதலருடன் கொண்டாடி மகிழ்ந்தார்.

ஸ்ருதி ஹாசன் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேலை என்ற நாடக கலைஞரை காதலித்து வந்தார். இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2019ம் ஆண்டு பிரிந்தனர். 

அப்போது வேறு வேறு நாட்டில் இருப்பதால் எங்களால் காதலை தொடர முடியவில்லை என மைக்கேல் விளக்கமளித்திருந்தார். 


தற்போது ஸ்ருதி ஹாசன் டூடுல் கலைஞர் சாந்தனு என்பவரை காதலித்து வருவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகின. தான் மீண்டும் காதலில் விழுந்திருப்பதாக ஸ்ருதியும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் ஸ்ருதி ஹாசனை  இறுக்கி அணைத்தபடி இருக்கும் போட்டோவை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார் சாந்தனு. இந்த புகைப்படம் வைரலானதை அடுத்து இவர் தான் ஸ்ருதியின் புதிய காதலர் என்பது தெரியவந்துள்ளது. 

டெல்லியை சேர்ந்த சாந்தனு ஒரு டூடுல் கலைஞர் ஆவார். கடந்த 2014ம் ஆண்டு நடந்த டூடுல் கலை போட்டியில் சிறந்த டூடுல் கலைஞராக தேர்வு செய்யப்பட்டவர். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் மும்பையில் ஒன்றாக கைகோர்ந்த படி நடந்து செல்லும் வீடியோ வெளியாகியது, அப்போது இருவருக்கும் இடையே இருந்த நட்பு தற்போது காதலாக மலர்ந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது காதலருடன் முதல் முறையாக நேற்று சென்னைக்கு வந்த ஸ்ருதிஹாசன் இது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார். 

மேலும் இருவரும் மாஸ்க் அணிந்தபடி, அனைவரும் வந்து செல்லும் பொது இடமான ஒரு துணிக் கடையில் இருப்பது போன்ற புகைப்படத்தை தான் ஸ்ருதி பதிவு செய்துள்ளார்.

இதில் சுருதிஹாசனின் நெருங்கிய தோழியான டிசைனர் அம்ரிதாவும் உள்ளார். இருவரும், காதலோடு ரொமான்டிக்காக எடுத்து கொண்ட செல்ஃபி இது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...