காதலர் தினத்தை சாக்சி அகர்வால் யாருடன், எப்படி கொண்டாடினார் தெரியுமா?

3 years ago 333

காதலர் தினத்தில் உலக பிரபலங்களும் காதலர்களும் தங்களது ரொமான்ஸ் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து லைக்ஸ்களை குவித்து வந்தனர்.

ஆனால் காதலர் தினத்திலும் வித்தியாசமாக நமது அன்பை வெளிப்படுத்தலாம் என்ற பிக்பாஸ் பிரபலம் சாக்ஷி அகர்வால் செயலுக்கு நெட்டிசன்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.


காதலர் தினத்தில் ஒரு அனாதை குழந்தைகள் இல்லத்திற்கு சென்ற சாக்ஷி அகர்வால் அவர்களுக்கு தனது கையாலேயே உணவு வழங்கி ஒரு சிலருக்கு ஊட்டியும் உள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை அவர் பதிவு செய்து கூறியிருப்பதாவது:

எனக்கு காதலர் தினம் என்பது ஒரு பையன் அல்லது பெண் இடையேயான காதல் என்பதற்கு அப்பாற்பட்டது. மேலும் நம்மைச் சுற்றியுள்ள எல்லா ஆத்மாக்களுக்கும் அன்பைப் பரப்புவதற்கான ஒரு தினம் இது ஆகும். ஒவ்வொரு நபரும் இந்த தினத்தை வெவ்வேறு வழிகளில் கொண்டாட தேர்வு செய்யலாம்.


இந்த அழகான, திறமையான அனாதை இல்ல குழந்தைகளுடன் எனது காதலர் தினத்தை கழித்தேன். அவர்களின் மகிழ்ச்சியை விட எனக்கு வேறு என்ன தேவை? அவர்களிடமிருந்து கிடைக்கும் இந்த அன்பு உலகில் உள்ள எல்லாவற்றையும் விட உயர்ந்தது. இந்த மகிழ்ச்சியான தருணங்களை எனது இன்ஸ்டா குடும்பத்துடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று பதிவு செய்துள்ளார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...