காதலிக்கும் போது எடுத்த முதல் புகைப்படத்தை பகிர்ந்த நடிகை

3 years ago 282

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்ட சினேகன் பல பாடல்களை எழுதியுள்ளார். இதுவரை 700-க்கும் மேற்பட்ட படங்களில் சுமார் 2500-க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினேகன் மிகவும் பிரபலமானார்.அதையடுத்து கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் இணைந்தார்.தற்போது  இளைஞரணி மாநிலச் செயலாளராகவும் உள்ளார் சினேகன்.


சமீபத்தில் சினேகன் கன்னிகாவிற்கு  கமல்ஹாசன் முன்னிலையில் திருமணம் நடைப்பெற்றது.அந்த திருமணத்தில் பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பின்பு திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

இந்நிலையில் நடிகை கன்னிகா ரவி திருமணத்திற்கு பின்பு தனது ட்விட்டர் பக்கத்தில் இருவரும் 7 வருடத்திற்கு முன்பு எடுத்தக்கொண்ட ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

மேலும் அதில்’ என் முதல் காதல் திருமணத்துடன் தொடர்கிறது.எங்களுடைய முதல் புகைப்படம் 2014 ஆம் ஆண்டு எடுத்தது.வாழ்த்திய எல்லோருக்கும் நன்றிங்க கொரோனா சூழ்நிலையால் யாரையும் கூப்பிட முடியல கோவம் வேண்டாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...