காதல் கணவரை பிரிகிறாரா சமந்தா? தீயாய் சமூக வலைத்தளத்தை சுற்றும் தகவல்!!

3 years ago 785

நடிகை சமந்தா அவருடைய கணவரை பிரிய உள்ளதாக, ஒரு தகவல் சமூக வலைத்தளத்தை ஒரு தகவல் சுற்றி வருகிறது. 

ஆனால் இது குறித்து சமந்தா தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் வெளியாகதாதல் இந்த வதந்தியாகவே இருக்கும் என கூறப்படுகிறது. 

நடிகை சமந்தா அனைத்து தரப்பு ரசிகர்களாலும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவர். இவரின் பவர் ஃபுல் நடிப்பும், திறமையும் தான் இவருக்கு பல ரசிகர்களை உருவாக்கி தந்துள்ளது என்றால் அதனை யாராலும் மறுக்க முடியாது.


சமந்தா ஒரு மாடர்ன் பெண்ணாக இருந்தாலும், தன்னுடைய மாமியார், மாமனார், உறவுகள் என அனுசரித்து குடும்பத்தை நடத்தி வருகிறார் என்று இவரை பார்த்து பொறாமை படுபவர்களும் உண்டு.

மேலும் சோசியல் மீடியாவில் அதிக ஆர்வம் காட்டும் இவர், அடிக்கடி, சமையல் செய்வது, தன்னுடைய நாயுடன் கொஞ்சுவது மற்றும் விதவிதமான புகைப்படங்களை வெளியிடவும் மறப்பது இல்லை.

கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாக திருமணம் செய்து கொண்ட இவர், திருமணம் ஆகி 4 வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. இதுகுறித்து அவ்வப்போது எழுப்பப்படும் கேள்விகளுக்கும் கூலாக பதில் கொடுத்து வருகிறார். 

இந்நிலையில் இவர் காதல் கணவரை திடீர் என பிரிய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆனால் இந்த தகவல் வழக்கம் போல் முன்னணி நடிகைகளை வைத்து கிளப்பி விடப்படும் வதந்தியாகவே இருக்க கூடும் என கூறப்படுகிறது.

மேலும் இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே சமந்தா சமீபத்தில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பெயரை மாற்றியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. எந்த ஒரு சர்ச்சைக்கும் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கும் சமந்தா இதற்கும் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார் என அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...