காதல் தோல்வி குறித்து மனம் திறந்த நடிகை அனுபமா

3 years ago 224

மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘பிரேமம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். 

இதையடுத்து தனுஷ் நடிப்பில் வெளியான ‘கொடி’ படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்த இவர், தற்போது ‘தள்ளிப்போகாதே’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அனுபமா, சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், நிஜ வாழ்க்கையில் நீங்கள் யாரையாவது காதலித்து இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதில் அளித்து அனுபமா பரமேஸ்வரன் கூறும்போது, “நான் ஒருவரை காதலித்து இருக்கிறேன். ஆனால் அந்த காதல் ரொம்ப காலம் நீடிக்கவில்லை. அது தோல்வி அடைந்து விட்டது. இப்போது நான் யாரையும் காதலிக்கவில்லை’’ என்றார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...