காதல் தோல்வி குறித்து மனம்திறந்த நித்யா மேனன்

3 years ago 270

நடிகை நித்யாமேனன் தமிழில் வெப்பம், மெர்சல், ஓ கே கண்மணி, சைக்கோ போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். அடுத்ததாக ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் தி அயர்ன் லேடி படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், நடிகை நித்யா மேனன் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: “என் மீது வரும் புகார்களையும் விமர்சனங்களையும் கண்டுகொள்ள மாட்டேன். 


எந்த விஷயம் ஆனாலும் ஒளிவு மறைவு இல்லாமல் நேராக எதிரில் பேசுவதும், தெளிவாக சொல்வதும்தான் எனது பழக்கம். எதற்கும் தயங்க மாட்டேன். எனது முதல் காதல் தோல்வியில் முடிந்தது. 

அதன்பிறகு கொஞ்ச நாட்கள் ஆண்களையே நான் வெறுத்தேன். இனிமேல் காதல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. யாருக்காகவும் என்னை நான் மாற்றிக்கொள்வது சுத்தமாக பிடிக்காது. 

எனக்கு பிடித்த மாதிரி வாழத்தான் விரும்புவேன். நிஜ வாழ்க்கையில் சாதாரண பெண்ணாகத்தான் யோசிப்பேனே தவிர நான் ஒரு நடிகை என்றோ, மற்றவர்களை விட வித்தியாசமானவள் என்றோ, ஏதோ ஆகாயத்தில் இருந்து குதித்தவள் என்றோ எப்போதும் நினைக்க மாட்டேன்.” இவ்வாறு நித்யா மேனன் கூறினார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...