காதல் பட நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் கோலிவுட் ரசிகர்கள்.!

3 years ago 633

இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் திரைப்படத்தில் சென்னைக்கு வந்து சினிமாவில் வாய்ப்பு தேடும் நடிகராக ,விருச்சக காந்த்' வேடத்தில் நடித்த பாபு அனைவரையும் சிரிக்க வைத்திருப்பார். 

அதில், "நடிச்சா ஹீரோ தான் சார். நான் வெயிட் பண்றேன் சார்." என்று அவர் பேசிய வசனம் மிகவும் பிரபலமானது. காதல் திரைப்படத்திற்கு பின்னர் அவருக்கு படவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் சென்னையில் பிச்சை எடுத்து தனது பிழைப்பை நடத்தி வந்துள்ளார். 

அவருக்கு சினிமா துறையைச் சேர்ந்த பலரும் உதவி செய்ய முன் வந்தனர். ஆனால், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக வாழ்ந்து வந்துள்ளார். 

அவர் ஆட்டோவில் படுத்து உறங்கிய நிலையிலேயே மரணம் அடைந்து இருக்கிறார். 

முன்னதாக நடிகர் தீப்பெட்டி கணேசன் உயிரிழந்து இருக்கும் நிலையில் பாபுவின் மரணமும் கோலிவுட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...