காவல்துறை வாகனத்தில் பயணம் செய்த அனுஷ்கா... ஏன் தெரியுமா?

3 years ago 359

ஐதராபாத்தில் பெண் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடந்தது. இதில் 750-க்கும் மேற்பட்ட பெண் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பெண் காவல்துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. 

இதில் நடிகை அனுஷ்கா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒரு பெண் காவல்துறை ஓட்டிய வாகனத்தில் ஏறி சிறிது தூரம் பயணம் செய்தார்.


மாநாட்டில் அனுஷ்கா பேசும்போது, “சினிமா திரையில் எங்களை நட்சத்திரங்களாக காட்டினாலும் இந்த அறையில் உட்கார்ந்திருக்கும் பெண் காவல்துறை அதிகாரிகளாகிய நீங்கள்தான் உண்மையான நட்சத்திரங்கள். நாங்கள் சினிமா நட்சத்திரங்கள்.

நீங்கள் நிஜமான நட்சத்திரங்கள். உங்களுடைய கடுமையான முயற்சியாலும் உழைப்பினாலும்தான் நாங்கள் எல்லோரும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறோம். உங்களுடைய தியாகங்கள் உயர்வானவை. ஒவ்வொரு பெண்ணும் ஆணுக்கு இணையாக உயர வேண்டும்’’ என்றார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...