கிரிக்கெட் வீரர் பும்ரா திருமணம் செய்யப்போவது இந்த நடிகையையா? ரசிகர்கள் ஷாக்!

3 years ago 518

பிரபலங்களின் தனிப்பட்ட விஷயம் வெளியாகாமல் மறைத்துவிடுவார்கள். ஆனால் எப்படியாவது லீக்காகி அதிர்ச்சியை ஏற்படுத்தும். அந்தவகையில் நடிகர் நடிகைகளின் காதல் கிசுகிசுக்களும் வதந்திகளாக பரவி விடும்.

அந்தவகையில், கடந்த சில வருடங்களாகவே நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரபல இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா என்பவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பியது. மேலும் இருவரும் மாறி மாறி சமூக வலைதளங்களில் பேசிக்கொண்ட பதிவுகளும் வைரலானது.

ஆனால் இருவருமே தங்களது காதலை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. மேலும் இருவரும் காதலிக்கவில்லை என்றும் சொல்லவில்லை.

இந்நிலையில் இங்கிலாந்துடன் இந்தியா 4 டெஸ்ட் கொண்ட சீரிஸில் விளையாடி வருகிறது. அதிலிருந்து தற்போது பும்ரா நடைபெற்று வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் போட்டியின் 4வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். அதற்கு காரணம் திருமணம் செய்யப் போவதாக கூறி விடுமுறை கேட்டு வந்துள்ளார்.

அதேசமயம் அனுபமா பரமேஸ்வரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்ஸ்டாகிராமுக்கு விடுமுறை என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே பும்ரா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இருவருக்கும் காதல் என கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தற்போது இருவரும் ஒரே நேரத்தில் விடுமுறை என பதவிட்டுள்ளது ரசிகர்களுக்கு சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

மேலும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. என்னதான் கிசுகிசுக்கள் கிளம்பினாலும் இன்னும் ஒருசில தினங்களில் காதல் இருக்கிறதா? இல்லையா? என்ற உண்மை தெரியவரும் என்கிறார்கள்.

இதுபற்றி பாலிவுட் வட்டாரத்தில் பும்ரா தொகுப்பாளினி சஞ்சனா கணேசன் என்பவரைத்தான் திருமணம் செய்யவிருக்கிறார் என்ற செய்தியும் வெளியாகி வருகிறது. மேலும் நடிகை ராசி கண்ணாவும் அவரின் கிரஷ் லிஸ்ட்டில் இருக்கிறார் என்றும் கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...