கில்லி படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்தவரா இது? இப்போ என்ன செய்கிறார்?

3 years ago 268

உச்ச நட்சத்திரங்களோடு நடித்தாலே சின்ன ரோல் செய்தாலும் பேமஸ் ஆகிவிட முடியும். 

அதிலும், விஜய் திரிஷா சேர்ந்து நடித்து, தரணி இயக்கிய கில்லி படத்தில் அம்மா ரோல் செய்தவரை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிடமுடியாது. அவரது பெயர் ஜானகி சபேஷ்.

அம்மணி தெலுங்குத் திரையுலகிலும் பிரபலம். தெலுங்கு இண்டஸ்ட்ரியில் அம்மா ரோல் என்றாலே முதலில் இயக்குனர்களுக்கு ஜானகி சபேஷ் தான் நினைவில்வருகிறார். 


கில்லி படத்தின் மூலம் ஜானகி புகழின் உச்சத்துக்கே போனாலும் அதற்கும் முன்பே, ஜீன்ஸ், குஷி, ஜோடி, அயன், வேட்டையாடு விளையாடு உள்பட பலப்படங்களில் கேரக்டர் ரோல் செய்து இருக்கிறார். சினிமாவில் வருவதைப் போலவே ஜானகி சபேஷ் நிஜத்திலும் ரொம்பவே அப்பாவிதான்.

ஜானகி சபேஸ்க்கு தவானி என்னும் ஒரு மகள் உள்ளார். தன் கணவர், மகள் தவானியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை ஜானகி வெளியிட்டுள்ளார். 

அதைப் பார்த்த ரசிகர்கள் அடடே நம்ம கில்லியம்மா குடும்பமா இது? என ஆச்சர்யத்தோடு கமெண்ட் செய்துவருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...