கீர்த்தி சுரேஷுக்கு திருமணம்.. மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா?

2 years ago 440

பிரபல நடிகை மேனகா மற்றும் பிரபல தொழிலதிபர் சுரேஷ் குமார் ஆகியோரின் இளைய மகள்தான் கீர்த்தி சுரேஷ். தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். 

தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் இவரை தமிழ்நாட்டில் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆக்கியது.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வரும் இவர் நடிகர் விஜய்க்கு ஜோடியாக சர்க்கார் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

நடிகர் ரஜினிகாந்துக்கு தங்கையாக அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 


கீர்த்தி சுரேஷின் பெற்றோர் இவருக்கு திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். கீர்த்தி சுரேஷின் தந்தை பிரபல அரசியல் கட்சியுடன் நெருக்கமான தொடர்பில் உள்ளவர். 

மேலும் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு அரசியல் சார்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளதாகவும் விரைவில் கீர்த்தி சுரேஷின் திருமணம் நடக்கும் எனவும் விவரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பெற்றோரின் இந்த முடிவுக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை. 

இணையத்தில் தீயாய் பரவி வரும் இந்த தகவல்கள் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் தரப்பிலிருந்து விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...