கீர்த்தி சுரேஷை தொடர்ந்து... பிரியங்கா அருள் மோகனுக்கு கிடைத்த வேற லெவல் வாய்ப்பு!

3 years ago 312

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'டாக்டர்' படத்தில் நடித்துள்ள பிரியங்கா அருள் மோகன். மீண்டும் சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்து இளம் நடிகைகளுக்கே செம்ம டஃப் கொடுத்துள்ளார்.

 

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும், 'டாக்டர்' படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்துள்ளவர்  பிரியங்கா அருள் மோகன்.


இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த படத்தை தொடர்ந்து சூர்யாவின் 40 ஆவது படமாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ள படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் கமிட் செய்யப்பட்டுள்ளார்.


சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க உள்ளார். 

இந்த அறிவிப்பு கடந்த வாரம் வெளியான நிலையில், தற்போது தன்னுடைய 3 ஆவது படத்திற்காக மீண்டும் சிவகார்த்திகேயன் படத்தில் பிரியங்கா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்க உள்ள 'டான்' ஏறி பெயரிடப்பட்டுள்ள படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்தில் தற்போது கதாநாயகியாக மீண்டும் பிரியங்கா அருள் மோகன் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது.

சிவகார்த்திகேயனுடன், ரஜினி முருகன், ரெமோ என அடுத்தடுத்து படங்களில் நாயகியாக நடித்ததை போன்று தற்போது, பிரியங்கா அருள் மோகன் நடிக்க உள்ளார்.

lyca நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தில், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...