கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படம்.... இந்த புள்ளைக்கு என்னதான் ஆச்சோ !

3 years ago 422

மலையாளத்தில் தயாரிப்பாளரான சுரேஷ் குமார், நடிகை மேனகா தம்பதியின் இரண்டாவது மகள் தான் கீர்த்தி சுரேஷ். 

இவர் தன் அப்பாவின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், அதன் பின் வளர்ந்த பிறகு, விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.


சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது. அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார்.


கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

இவர் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளி அன்று ரீலீஸ் அகவுள்ளது என்று அதிகாரப் பூர்வமாக கூறியுள்ளனர். 

அந்த வகையில் அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் கீர்த்தி சுரேஷ் நடித்த ராங்குதே என்ற படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று உள்ளது.

தற்போது தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நல்லா குத்தவெச்சு உட்க்கார்ந்தபடி எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...