குக் வித் கோமாளி புகழ் செப் தாமுவின் மகள்களா இது? எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!

3 years ago 524

முன்பெல்லாம் வெள்ளித்திரைக்குத்தான் மக்கள் மத்தியில் செம ரீச் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கே மக்கள் மத்தியில் பெரிய கிரேஸ் இருக்கிறது. 

அவர்கள் தினமும் சீரியல் பார்ப்பதால் வெள்ளித்திரைக்கு இணையாக இவர்களுக்கும் வாய்ஸ் உள்ளது.

அதிலும் விஜய் டிவியில் சின்னதாக ஒரு ஷோவில் தலைகாட்டினாலும் பெரிய நட்சத்திரம் போல் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆகிவிடுகின்றனர். 

அந்தவகையில் விஜய் டிவி பலரது வாழ்க்கைக்கும் ஏணியாக இருந்துள்ளது. நடிகர்கள் சிவகார்த்திகேயனும், ரோபோ சங்கரும் சின்னத்திரையில் இருந்து அதிலும் விஜய் டிவி ஷோவின் மூலம் வெள்ளித்திரை நோக்கி நகர்ந்தவர்கள் தான். அந்த வரிசையில் விஜய் டிவியில் குக் வித் கோமாளி ஷோவில் வரும் செப் தாமுவும் ரொம்ப பேமஸ்.

பல வருடமாக சமையல் துறையில் இருக்கும் செப் தாமு, ஏராளமான விருதுகளும் வாங்கியிருக்கிறார். ஆனாலும் அவர் நடுவராக இருக்கும் குக் வித் கோமாளி அவரை வேற லெவலில் ரீச் ஆக்கியுள்ளது. 

சமீபத்தில் செப் தாமு, தனது மனைவியுடன் சேர்ந்து அதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நம்ம வீட்டுக் கல்யாணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். செப் தாமு, முதன்முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகள்களின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

செப் தாமு வழக்கமாகவே சமையல் வீடியோக்களை மட்டும் வெளியிட்டு வந்தார். இப்போதுதான் முதன்முதலாக தனது மகள்களின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 

அதைப் பார்த்த ரசிகர்கள் அடடே செப் தாமுவின் மகள்களா இது? செம அழகாக இருக்கிறார்களே! என கமெண்ட் செய்துவருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...