தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்பவர் சூர்யா. சமீபத்தில் 'சூரரைப் போற்று' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றிருந்தார்.
இந்நிலையில் தற்போது ஜோதிகா மற்றும் 2 குழந்தைகளுடன் சூர்யா மும்பைக்கு மாறியுள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது.
மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியே வரும் சூர்யா, ஹோட்டல்களுக்குச் செல்லும் சில படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில், இத்தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சூர்யா தனது குழந்தைகளை மும்பை பள்ளியில் சேர்த்துள்ளதாகவும், அவரது மனைவி ஜோதிகா ஹிந்தி வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த காரணத்திற்காக, சூர்யா மும்பையில் 70 கோடி ரூபாய்க்கு ஒரு புதிய வீட்டை வாங்கி தனது குடும்பத்துடன் குடியேறியுள்ளார் என சொல்லப்படுகிறது.
ஆனால், சூர்யா - ஜோதிகா குடும்பம் நிரந்தரமாக மும்பைக்கு மாறிவிட்டனரா அல்லது சில வருடங்கள் மட்டுமே இருப்பார்களா என்பது வரும் காலத்திலேயே தெரியுமென்கின்றனர் அவருக்கு பரிட்சயமானவர்கள்.
சூர்யா இதுநாள்வரை சென்னையில் தனது பெற்றோர் சிவக்குமார், லட்சுமி, தம்பி கார்த்தி மற்றும் அவரது குடும்பத்தினருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார். அப்படியான சூழலில் முதல் முறையாக பெற்றோரை விட்டு பிரிந்து தனியாக குடியேறியுள்ளார் அவர் என தெரிகிறது.