குழந்தையுடன் உயிருக்கு தவிக்கும் நயன்தாரா

2 years ago 475

கடந்த சில வருடங்களாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து வரும் நயன்தாரா தற்போது ஓ 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். யூட்யூப் சேனல் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள குழந்தை ரித்விக் இந்த படத்தில் நடித்துள்ளார். 

விக்னேஷ் இயக்கியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. வரும் ஜூன் 17ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ட்ரைலரும் பலரையும் கவர்ந்துள்ளது.

ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் சுவாசிக்கும் மகனுக்கு அம்மாவாக நயன்தாரா இப்படத்தில் நடித்துள்ளார். வழக்கமாக இதுபோன்ற கதாபாத்திரங்களில் நயன்தாரா அதிக அளவில் ஸ்கோர் செய்வார். அந்த வகையில் இந்த டிரைலரில் இடம் பெற்றுள்ள காட்சிகளில் அவர் தன் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். 

தன் மகனின் ட்ரீட்மென்டுக்காக கேரளா செல்லும் நயன்தாரா ஒரு பஸ்சில் பயணிக்கிறார். அந்த பஸ் எதிர்பாராதவிதமாக ஆழமான பள்ளத்திற்குள் காணாமல் போகிறது. இதை மீட்பு குழுவினர் எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்றும், பஸ்ஸில் ஆக்சிஜன் இல்லாமல் தவிக்கும் பயணிகளின் நிலை என்ன என்பது பற்றி தான் இந்த கதை.

இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொள்ளும் பயணிகள் அதிலிருந்து வெளியே வருவதற்காக போராடுவது பயங்கர திகிலாக இருக்கிறது. அதனால் அவர்களுக்குள் ஏற்படும் குழப்பமும், மோசமான நடவடிக்கைகளும் படத்தின் கதை என்ன என்பதை தெளிவாக காட்டுகிறது.

 இந்த ட்ரெய்லர் ஏற்கனவே நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்த அறம் திரைப்படத்தை நினைவூட்டுவது போன்று இருந்தாலும் ஒரு ஆர்வத்தையும் தூண்டியுள்ளது. மேலும் பின்னணி இசையும், பயணிகள் தங்களுக்குள் ஆக்ரோசமாக சண்டையிடும் காட்சிகளையும் பார்க்கும்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...