குவியும் பட வாய்ப்பு… கால்ஷீட் கொடுக்க மறுக்கும் பூஜா ஹெக்டே... ஏன் தெரியுமா?

3 years ago 376

தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையானார். 

தற்போது தமிழ், தெலுங்கும், இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் ஆச்சார்யா, ராதே ஷியாம், மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலர், சர்க்கஸ், தளபதி 65 போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் உள்ளன.

இந்நிலையில் மகேஷ்பாபு, திரிவிக்ரம் இணையும் படத்தில் பூஜா ஹெக்டே நடிப்பதாக செய்திகள் வெளியாகின. இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள பூஜா ஹெக்டே, இப்போதைக்கு தனது முழுக் கவனமும் கைவசமுள்ள படங்களில் தான் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் குறைந்த பிறகு கைவசம் உள்ள படங்களில் நடித்து முடித்த பிறகுதான் மற்ற நடிகர்களின் படங்களில் நடிப்பது பற்றி யோசிப்பேன் என கூறியுள்ள பூஜா ஹெக்டே, அதுவரை புதிய படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...