‘கே.ஜி.எப் 2’படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்? ரசிகர்கள் ஏமாற்றம்!

3 years ago 235

யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் ‘கே.ஜி.எப்’. பிரசாந்த் நீல் இயக்கி இருந்த இப்படம் வசூலையும் வாரிக் குவித்தது. 

தற்போது, கே.ஜி.எப் படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஒரே சமயத்தில் 5 மொழிகளிலும் வெளியாகவுள்ளது. ஜூலை 16-ம் தேதி ‘கே.ஜி.எப் 2’ வெளியாகும் என படக்குழுவினர் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடந்தது.

இந்நிலையில், தற்போது கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கே.ஜி.எப் 2 படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 

இதனால் கே.ஜி.எப் 2 படம் திட்டமிட்டபடி ஜூலை 16-ம் தேதி வெளியாகாது எனக் கூறப்படுகிறது. அதற்குப் பதிலாக புதிய தேதியை படக்குழுவினர் விரைவில் அறிவிப்பார்கள் என தெரிகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...