கேஜிஎப் சிறுவயது ராக்கி பாய் இப்போது எப்படி உள்ளார் தெரியுமா.?

3 years ago 423

பிரசாந்த் நில் இயக்கத்தில் 2018 பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டது கேஜிஎப் திரைப்படம். இந்த படத்தில் யாஷ், ஶ்ரீனிதி ஷெட்டி, ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

80 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் கிட்டத்தட்ட 250 கோடி வரை வசூல் சாதனை படைத்தது. இந்த வெற்றியை அடுத்து கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ள கேஜிஎப் திரைப்படம் கிட்டதட்ட 5 மொழிகளில் வெளியிடப்பட்டது.

கே ஜி எஃப் கதாநாயகனாக நடித்த யாஷ் சிறுவயதில் ஆக்ரோஷமாக நடித்திருப்பார். இந்த சிறுவனின் நடிப்பு மற்றும் சென்டிமென்ட் காட்சிகள் தியேட்டரில் அதிக கைதட்டல்களை வாங்கின.

சிறுவயது ராக்கி பாயாக மிரட்டிய அந்த சிறுவன் தற்போது எப்படி உள்ளார் என்று புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...