கேபி கூட ஆட்டம் போட்ட ஆஜித்திற்கு ஏற்பட்ட பரிதாபம்... ரசிகர்கள் அதிர்ச்சி...!

3 years ago 312

தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசன் தங்கையாக நடித்து பிரபலமானவர் கேப்ரில்லா. 

சின்னத்திரை நடன நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த கேப்ரில்லாவுக்கு ஜாக்பாட் அடித்தது. கடந்த ஆண்டு நடந்த பிக்பாஸ் 4 நிகழ்ச்சி மூலம் கேப்ரில்லா பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார். 

அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கேப்ரில்லா, தற்போது விஜய் தொலைக்காட்சி நடத்தும் மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். 

விஜய் தொலைக்காட்சி நடத்தி வரும்  பிபி ஜோடிகள்  என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இவருடன் ஆஜித் ஜோடி சேர்ந்து நடனமாடி வருகிறார். 

4 நாட்களுக்கு முன்பு தன்னுடைய சோசியல் மீடியா மூலமாக தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேப்ரில்லா அறிவித்தார். 

வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ள கேப்ரில்லா, அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படியும் வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இதையடுத்து கேபி உடன் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்தனர். தற்போது கேபி-யின் டான்ஸ் பார்டனர் ஆன ஆஜித்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தன்னுடைய சோசியல் மீடியா மூலமாக ரசிகர்களுக்கு இதனை தெரிவித்துள்ள ஆஜித், “எனக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். 

தேவையான தடுப்பு மருந்துகளை எடுத்து வருகிறேன். உங்களின் பிரார்த்தனையால் நான் நலமுடன் உள்ளேன். இந்த வார துவக்கம் வரை எந்த அறிகுறியும் இல்லாமல் தான் இருந்தது. 

நீங்கள் உங்கள் வீட்டை விட்டு வெளியே வருவதாக இருந்தால் பாதுகாப்பு வழிமுறைகளை தயவு செய்து பின்பற்றுங்கள். பாதுகாப்பாக இருங்கள். உலகம் விரைவில் சகஜ நிலைக்கு திரும்ப பிரார்த்தனை செய்வோம்” என தெரிவித்துள்ளார். 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...