தனுஷ் நடித்து வரும் படம், 'கேப்டன் மில்லர்'. கன்னட நடிகர் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் உட்பட பலர் நடிக்கின்றனர்.
அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு தென்காசி அருகே நடைபெற்று வருகிறது. அங்கு காட்டுப் பகுதியில் போர்க் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்தக் காட்சிகளை வீடியோ எடுத்த ஒருவர், அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்தது. அந்த காட்சிகளை நீக்கும்பணியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.