சினிமாவை விட தற்போது சீரியல்கள் தற்போது மக்களின் பேராதரவை பெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சினிமாவை பார்க்க தியேட்டருக்கு செல்ல வேண்டும் ஆனால், சீரியல்கள் வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சிகளில் கண்டு ரசிக்கலாம்.
இதன் மூலம் சீரியல் நடிகர் நடிகைகள் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர்களாக உள்ளனர். ஆனாலும் சின்னத்திரையில், வரும் அனைத்து சீரியல்களும் வெற்றி பெறுகிறதா என்று கேட்டால் அதற்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அதேபோல் சீரியல் நடிகைகள் அனைவருக்குமே ரசிகர்கள் அதிக ஆதரவு அளித்து வருகிறார்களா என்பது கேள்விக்குறிதான். ஆனால் சீரியலில் நடித்து வரும் குழந்தை நட்சத்திரங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருவது தவிர்க்க முடியாத உண்மை.
அந்த வகையில் சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்களின் மனங்களை கவர்ந்தவர் நேகா மேனன். கேரளாவை பூர்வீகமான கொண்ட இவர், சன் டிவியில் ராதிகா நடிப்பில் சக்கை போடு போட்ட வாணி ராணி சீரியலில் தேனு கேரக்டர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
அந்த சீரியலில் ராதிகாவின் ராதிகாவின் கடைசி மகளாக புத்திசாலி தனமான நடிப்பாலும், தனது பேச்சுத்திறமையாலும் ஏராளமாக மனங்களை கவர்ந்தவர்.
மேலும் இந்த சீரியலில் நாயகி ராதிகாவுக்கும் இவருக்குமான காட்சிகளுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் என்றே கூறலாம். அதன்பின் இவரின் உண்மையாக பெயர் மறந்து அனைவரும் தேனு என்றே அழைக்க தொடங்கினர். அந்த அளவிற்கு தனது நடிப்பாற்றல் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டவர் நேகா மேனன்.
வாணி ராணி சீரியல் முடிந்து நீண்ட இடைவேளைக்கு ராதிகா மீண்டும் சின்னத்திரையில் தோன்றிய சித்தி 2 சீரியலில், நடித்த நேகா மேனன் ரசிகர்களின் கேலி கிண்டலுக்கு ஆளானார்.
இதற்கு முக்கிய காரணம் வாணி ராணி சீரியலில், குழந்தை நட்சத்திரமாக இருந்த இவர், சித்தி 2 சீரியலில் எண்ட்ரியின்போது சற்று வளர்ந்து உடல் குண்டாக இருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரின் பழைய புகைப்படங்களை வைத்து இணையத்தில் ட்ரோல் செய்ய தொடங்கினர்.
ஆனாலும் இந்த கேலி கிண்டல்களை பொருட்படுத்தாத நேகா மேனன், தற்போது விஜய் டிவியில் பாக்கியலட்சுமி தொடரில் இனிய என்ற பள்ளி மாணவி கேரக்டரில் சிறப்பாக நடித்து வருகிறார்.
ஆனாலும் இவர் குறித்து கிண்டலும் கேலியும் இன்னும் குறைந்த பாடில்லை. இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை கிண்டல் பல பதிவுகள் வந்ததாகவும், அந்த நபர்களை பிளாக் செய்துவிட்டதாகவும், நேகா மேனன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
நேகாவின் அம்மாவுக்கு பல வருடங்கள் கழித்து பெண் குழந்தை பிறந்தது. அதுவரை வீட்டில் தனி ஆளாக இருந்த நேகாவுக்கு தற்போது தங்கை துணை கிடைத்துள்ளது.
தனக்கு தங்கை பிறந்துள்ளதாக நேகா சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.