கொரோனா அச்சத்தால் படப்பிடிப்புக்கு வரமறுத்த பிரபல நடிகர்

3 years ago 298

பிரபல தெலுங்கு நடிகரான ஜெகபதிபாபு, தமிழில் தாண்டவம், புத்தகம், லிங்கா, கத்தி சண்டை, பைரவா, விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

தற்போது ரஜினியுடன் அண்ணாத்த, தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகும் மகா சமுத்திரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

மகா சமுத்திரம் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. இப்படத்தின் முக்கிய காட்சிகளை விசாகப்பட்டினத்தில் படமாக்கி வருகிறார்கள். 

இதற்காக துணை நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விசாகப்பட்டினத்தில் குவிந்துள்ளனர். ஜெகபதிபாபு நடிக்கும் காட்சிகளை படமாக்க அழைத்தபோது அவர் படப்பிடிப்புக்கு செல்ல மறுத்து விட்டாராம்.

கொரோனா இரண்டாவது அலை பரவுவதால், நெடுந்தொலைவுக்கு பயணம் செய்து என்னால் வர முடியாது என்று சொல்லி அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. 

இதனால் அப்படத்தின் தயாரிப்பாளர் அதிர்ச்சியாகி உள்ளார். ஜெகபதிபாபு வசிக்கும் இடத்தின் பக்கத்திலேயே அரங்குகள் அமைத்து அவர் நடிக்கும் காட்சிகளை படமாக்கலாமா? என்று ஆலோசிக்கிறார்களாம்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...