கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் போட்டுக்கொண்ட கார்த்திக்

3 years ago 344

இந்தியாவை ஆட்டிப்படைக்கும் கொரோனாவில் இருந்து தப்பிக்க பலரும் ஆர்வமுடம் கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர். 

கடந்த மாத தொடக்கத்தில் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கார்த்திக், தற்போது உடல்நிலை சரியாகி மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளார். 

இந்நிலையில் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட கார்த்திக், தற்போது கொரோனா தடுப்பூசி இரண்டாம் டோஸ் எடுத்துள்ளார்.

இந்நிலையில் அந்தகன் படத்தின் குழுவினர் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

பாதுகாப்பாக படப்பிடிப்பை தொடர வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த படக்குழுவும் தடுப்பூசி போட்டு கொண்டதாக படத்தின் இயக்குனர் தியாகராஜன் கூறியுள்ளார். 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...