கொரோனா நிவாரண நிதி.! அள்ளிக்கொடுத்த தல அஜித்.! எவ்வளவு தெரியுமா.?

3 years ago 277

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2ஆம் அலை தற்போது தீவிரமாக பரவி வருகிறது. தற்போது தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தமிழகத்தில் 30 ஆயிரத்திற்கு மேலாக அதிகரித்து வருகிறது. 

கொரோனவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. 

தமிழகத்தில் தற்போது கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு நிதி தேவைப்படுகிறது. இந்தநிலையில், நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் முதல்வரின் நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்யலாம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். 

மேலும், இதற்காகச் செலுத்தப்படும் நிதி அனைத்தும் கரோனா நிவாரணத்திற்கு முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்றும், அதன் கணக்குவழக்குகள் வெளிப்படைத் தன்மையாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார். 

ஏற்கெனவே நடிகர் சிவக்குமார், சூர்யா, கார்த்தி கொரோனா நிவாரணத்திற்கு ரூ.1 கோடி நிதி அளித்திருந்த நிலையில் திரைத்துறையினர் பலரும் நிதி வழங்கி வருகின்றனர். இந்நிலையில் வங்கி பரிவர்த்தனை மூலம் கொரோனா நிவாரணத்திற்கு ரூ. 2.5 கோடி நிதி அனுப்பியிருக்கிறார் நடிகர் அஜித்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...