கொரோனா பாதிப்பு: வீடு திரும்பிய நடிகர் சூர்யா!

3 years ago 464

நடிகர் சூர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வீடு திரும்பியுள்ளார் என்று அவரது தம்பி கார்த்தி தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா கடந்த 7-ம் திகதி தனது டுவிட்டரில் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். 

அதனை தொடர்ந்து அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பிராத்தனை செய்து வந்தனர்.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் சூர்யா குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக அவரது தம்பி நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.  

அவரது ட்விட்டர் பக்கத்தில் “அண்ணா வீடு திரும்பியுள்ளார். அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். சில நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பார். 

உங்களது பிரார்த்தனை மற்றும் வாழ்த்துகளுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை” என்று உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...