கொரோனாவில் இருந்து குணமடைந்த தனுஷ் பட நடிகை..! அவரே சொல்லிய தகவல்..!

3 years ago 246

தனுஷ் நடித்த ’அசுரன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த அம்மு அம்பிரமி, சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அதில் இருந்து பூரணமாக குணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

 கோலிவுட் திரையுலகினர் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் இதுவரை நடிகர் அதர்வா, அஜித் பட நடிகை சமீரா ரெட்டி, பூஜா ஹெக்டே, சூர்யா, மாதவன் என  கொரோனாவால் பாதிக்கப்பட்ட கோலிவுட் பிரபலங்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவரான அம்மு அபிராமி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். 

இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மே 3 ஆம் தேதி அன்று, கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும், மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். 

இதையடுத்து, தற்போது கொரோனா தொற்றில் இருந்து மிக விரைவில் பூரணமாக குணமமடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். 

கொரோனா சோதனையில் தனக்கு நெகட்டிவ் என வந்துவிட்டதாகவும், அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதோடு, மாஸ் அணிவது கட்டாயம் என்றும், முடிந்த வரை வெளியில் செல்லாமல் வீட்டில் பத்திரமாக இருங்கள் என கேட்டு கொண்டுள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...