கொரோனாவுக்கு தமிழ் திரையுலகில் அடுத்த பலி! பிரபல நடிகர் மரணம்

3 years ago 595

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஷமன் மித்ரு கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுத் தொடர்ந்து திரைப்பிரபலங்கள் பலரும் சமீபத்தில் உயிரிழந்தனர்.

நடிகர்கள் பாண்டு, ஜோக்கர் துளசி, கில்லி மாறன், கேவி ஆனந்த், தாமிரா, நிதிஷ் வீரா போன்றோர் கொரோனா தொற்றுக்கு பலியானார்கள்.

இந்த நிலையில் பிரபல நடிகர் ஷமன் மித்ரு கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். 2019-ஆம் ஆண்டு வெளியான தொரட்டி திரைப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது.

அந்த படத்தில் கதாநாயகனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ஷமன் மித்ரு பாராட்டுகளையும் பெற்றார்.

கடந்த ஒரு மாத காலமாக கொரோனா காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷமன் மித்ரு இன்று காலை உயிரிழந்தார்.

அவரின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...