கொரோனாவுக்கு மகனை பறி கொடுத்த பிரபல தமிழ் நடிகை... பிரபலங்கள் ஆறுதல்

3 years ago 445

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் இந்தியாவை தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது. திரையுலகினரும் இதன் தாக்கத்திலிருந்து தப்பவில்லை. பிரபல நடிகை கவிதாவின் மகன் கொரோனா பெருந்தொற்றால் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கவிதா ஆந்திராவை சேர்ந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். தமிழில் 1976-ல் வெளியான ஓ மஞ்சு திரைப்படத்தில் அறிமுகமானவர் நாயகி முதற்கொண்டு அம்மா கதாபாத்திரம் வரை பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார். தற்போது ஸீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்றென்றும் புன்னகை தொடரிலும் நடித்து வருகிறார்.

இவரது மகன் சாய் ரூப், கணவர் தசரத ராஜ் இருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று சிகிச்சை பலனில்லாமல் சாய் ரூப் மரணமடைந்தார். 

கணவர் தசரத ராஜ் இப்போதும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். கொரோனா பெருந்தொற்றில் மகனை பறிகொடுத்த கவிதாவுக்கு திரையுலகினர் ஆறுதல் கூறி வருகின்றனர். அவரது கணவர் உடல்நிலை தேறி வர வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனையாக உள்ளது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...