கொரோனாவை கூட பார்க்காமல் பிரபல நடிகை செய்த வேலை... ஷாக்கில் ரசிகர்கள்

3 years ago 391

சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கும் ரசிகர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சிருக்கும் வரை, ஆயுத எழுத்து போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை சரண்யா துராடி.

தனது தனித்துவமான நடிப்பால் மக்களை தனது ரசிகர்களாக மாற்றி உள்ளார் சரண்யா. 

கொரோனா சூழ்நிலையால் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை தங்களால் முடிந்த வகையில் செய்துவருகிறார்கள். அந்தவகையில் தற்போது நடிகை சரண்யாவும் களமிறங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உணவளிக்கும் சேவையில் 2வது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறேன். லாக் டவுன் என்பதால் தினமும் காலையில் நானே வண்டியை எடுத்து கொண்டு உணவு பொட்டலங்களோடு கிளம்புகிறேன்.

இரட்டை மாஸ்க் மற்றும் சானிடைசர் பாட்டிலோடு தடுப்பூசி தந்த துணிவே துணையென்று கிளம்பினாலும் ஒவ்வொரு நாளும் தெரிந்த வட்டத்தில் நிகழும் மரணச் செய்தி கலக்கத்தை கொடுக்கிறது. பசித்த முகத்தில் தெரியும் நன்றியும் அன்புமே இந்த கடினமான சூழலை கடக்க உதவுகிறது.

நல் உள்ளங்கள் சிலர் தங்களால் ஆன நிதி அனுப்பி உணவளிக்கும் என் கரங்களுக்கு வலு சேர்த்து இருக்கிறீர்கள். அத்தனை பேருக்கும் என் மரியாதையும் பேரன்பும். தொடர்ந்து பசியாற்றுவோம் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...