கோப்ரா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

2 years ago 412

நடிகர் விக்ரம் இவர் எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்திற்காக தனது உடலையும் வருத்தி  மாறி நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அப்படி இவர் நடித்த படங்களும் வெற்றி பெற்றுள்ளன.அதேபோல தற்பொழுதும் கோப்ரா திரைப்படத்திற்காக பல்வேறு கெட்டப்புகளை போட்டு நடித்து அசைத்தி உள்ளார் விக்ரம். 

இந்த படம் நேற்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான கோப்ரா.

இந்த திரைப்படம் தற்பொழுது மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது. 

இந்த படத்தில் விக்ரமுடன் கைகோர்த்து ஸ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், மீனாட்சி கோவிந்தராஜன், கே எஸ் ரவிகுமார், பாபு ஆண்டனி, ரோபோ ஷங்கர், கனிகா, ஆனந்தராஜ், பூவையார், முஹம்மத் அலி, baig மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இந்த  படம் முழுக்க முழுக்க ஆக்சன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த ஒரு படமாக இருந்தாலும் படம் லென்த் காரணமாக தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது மத்தபடி குறைகளை ஒன்றுமில்லை. 

ஒரு சில ரசிகர்களோ படம் வேற லெவல் இந்த படம் சியான் விக்ரமுக்கு ஒரு நல்லதொரு வெற்றி படமாக இருக்கும் என கூறி வருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் முதல் நாளில் சியான் விக்ரம் நடித்த கோப்ரா திரைப்படம் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி பார்க்கையில் தமிழகத்தில் மட்டுமே முதல் நாளில் சுமார் 10 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக தகவல்கள் சொல்லுகின்றன. வருகின்ற நாட்களிலும் இந்த படத்திற்கான வரவேற்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...