கோமாவுக்கு சென்ற நடிகர் வேணு அரவிந்த் தற்போதைய உடல் நிலை என்ன?

3 years ago 421

தமிழ் சின்னத்திரையில் வாணி ராணி சந்திரலேகா உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்தவர் வேணு அரவிந்த். திரைப்படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ள இவர் கரோனா வைரஸ் தொற்றல் பாதிக்கப்பட்டு அதில் இருந்து குணமடைந்த பின்னர் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். 

மூலையில் சிறு கட்டி உருவாக்க அதை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நீக்கப்பட்டது. இப்படியான நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு கோமா நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. 

இதனால் ரசிகர்கள் சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் அவர் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்தனர்.

இந்த நிலையில் தற்போது சின்னத்திரையில் நடிகர் வேணு அரவிந்த் கோமாவில் இல்லை அவர் சுயநினைவோடு தான் இருக்கிறார். தனக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டு அறிகிறார். 

சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க சீரியல் நடிகர் அருண் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தகவல்களை அவர் வேணு அரவிந்த் மனைவி ஷோபாவிடம் கேட்டு அறிந்ததாக கூறியுள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...