கோவிலை விட்டு வேகமாக சென்ற யோகி பாபு

4 years ago 229

சினிமா துறையில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலுக்கு திடீரென வருகை தந்தார்.

ஆனால் அவரை முதலில் யாரும் கவனிக்கவில்லை. இதனால் அவர் பொதுமக்களோடு நின்று கோவிலுக்குள் சென்று தீபம் ஏற்றி வழிபட்டார். 

பின்னர் அவர் விநாயகர், பாடலீஸ்வரரை தரிசனம் செய்தார். தொடர்ந்து பல்வேறு சன்னதிகளுக்கு சென்று வழிபட்ட அவர் கோவிலை விட்டு வெளியே வந்தார்.

அப்போது அவரை அடையாளம் கண்ட பொதுமக்கள், அங்கு கடை வைத்திருக்கும் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் அவருடன் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

சற்று நேரத்தில் நடிகர் யோகிபாபு கோவிலுக்கு வந்த செய்தி காட்டுத்தீ போல பரவியது. இதனால் அவரை காண ஏராளமானோர் கோவிலுக்கு வரத்தொடங்கினர். இதையடுத்து அவர் அவசரம், அவசரமாக காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...