கௌதமிக்கு பதிலாக கமலுடன் ஒப்பந்தமாகியுள்ள முன்னனி நடிகை!

3 years ago 436

மோகன்லால், மீனா உள்ளிட்டோர் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் திரிஷ்யம். சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி முதல் பாகத்தை போலவே வெற்றி பெற்றது.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாள மொழியில் பெரிய வெற்றி படமாக அமைந்த திரிஷ்யம், தமிழ் மொழியில் பாபநாசம் எனவும் மற்றும் பல மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டு நல்ல ஆதரவை பெற்றது. தமிழில் கமல்ஹாசன், கௌதமி, நிவேதா தாமஸ், எஸ்தர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தமிழில் பாபநாசம் பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில், திரிஷ்யம் - 2 வையும் பாபநாசம் - 2 என்ற தலைப்பில் மறு ஆக்கம் செய்யவுள்ளனர். பாபநாசம் முதல் பாகத்தை போலவே இதையும் ஜீத்து ஜோசப்பே இயக்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் குறித்து ஏதும் அறிவிப்பு வெளியாகவில்லை. கமலுக்கு விக்ரம், இந்தியன் 2 என படங்கள் உள்ள நிலையில் அதை முடித்த பின்னரே பாபநாசம் 2ம் பாகத்தில் நடிக்கவுள்ளார் என தெரிகிறது. இதற்கு கமல் 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

பாபநாசம் முதல் பாகத்தில் கமல் - கௌதமி ஜோடியாக நடித்திருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் நடிக்க கௌதமி மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது. கௌதமிக்கு பதிலாக திரிஷ்யம் படத்தில் நடித்துள்ள முன்னனி நடிகை மீனாவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...