சஞ்சீவுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்து உண்மையை போட்டுடைத்த வனிதா!

3 years ago 563

நடிகை வனிதா விஜயகுமார், நடிகரும் தொலைக்காட்சி பிரபலமுமான சஞ்சீவுடன் தான் இருக்கும் படத்தைப் பகிர்ந்து, தங்களுக்கு இடையேயான உறவுமுறையைக் குறிப்பிட்டுள்ளார்.

'பிக் பாஸ் 3' மற்றும் 'குக்கு வித் கோமாளி' புகழ் வனிதா விஜயகுமார், சில நாட்களுக்கு முன்பு கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு விமானியுடன் நான்காவது முறையாக திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக வெளியான வதந்திகளை மறுத்தார்.

அப்போது, "உங்களுக்கு தெரியப்படுத்துவதற்காக, நான் சிங்கிள், அப்படியே இருக்கிறேன், எந்த வதந்திகளையும் பரப்ப வேண்டாம் அல்லது நம்ப வேண்டாம்” எனக் குறிப்பிட்டிருந்தார். 


இந்நிலையில் தற்போது பிரபல நடிகர் சஞ்சீவுடன் தான் இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், வனிதாவுக்கும், சஞ்சீவுக்கும் என்ன சம்மந்தம் எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த வனிதா, ”எனது அம்மா மஞ்சுளாவின் சொந்த சகோதரி ஷ்யாமளாவின் மகன் தான் சஞ்சீவ், எனக்கு மிகவும் பிடித்த சகோதரர்” என பதிலளித்திருக்கிறார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...