சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் உறுதியானது! ஹீரோ யார் தெரியுமா?

3 years ago 378

கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குனர் பீ.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான சந்திரமுகி, மிக பெரிய வெற்றியடைந்து சாதனை படைத்தது.

மலையாள படத்தின் ரீமேக்கான சந்திரமுகி ரசிகர்களின் பேரதராவை பெற்று இங்கு ஒரு வருடத்திற்கு மேலே திரையரங்கில் ஓடியது. 

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக கூறப்பட்டது, ஆனால் அப்படம் குறித்து எந்தஒரு தகவலும் வெளியாகவில்லை.

மேலும் தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது, பீ.வாசு இயக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு 2022 முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...