சந்திரமுகியாக நடிக்கும் அனுஷ்கா? - உண்மையை உடைத்த இயக்குநர் பி.வாசு

3 years ago 326

ரஜினியின் ‘சந்திரமுகி’ படம் 2005-ல் திரைக்கு வந்து பெரிய வெற்றி பெற்றது. இதில் பிரபு, நாசர், ஜோதிகா, நயன்தாரா, வடிவேல், மாளவிகா ஆகியோரும் நடித்து இருந்தனர். பி.வாசு இயக்கினார். 

மீண்டும் இவரது இயக்கத்திலேயே ‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது.  இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளனர். 

முதல் பாகத்தில் சந்திரமுகியாக ஜோதிகா நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் அவர் நடிக்க மறுத்துவிட்டதால், தற்போது அதற்கான நடிகைகள் தேர்வு நடக்கிறது. இதனிடையே ‘சந்திரமுகி-2’ படத்தில் நடிக்க நடிகை அனுஷ்காவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் பரவி வந்தது.

இந்நிலையில், இதுகுறித்து இயக்குனர் பி.வாசு கூறியதாவது: “ஜோதிகா வேடத்தில் யாரை நடிக்க வைப்பது என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அனுஷ்கா மட்டுமின்றி இன்னும் சில முன்னணி நடிகைகளிடமும் பேசி வருகிறோம். 

சந்திரமுகியாக அனுஷ்கா தான் நடிக்கிறாரா? இல்லை வேறு நடிகை நடிக்க உள்ளாரா? என்பது குறித்து படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

இதன்மூலம் ‘சந்திரமுகி 2’ படத்தில் அனுஷ்கா நடிப்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...