சன் டிவி சீரியலில் நடிக்கும் அஜித் பட நடிகை - யார் தெரியுமா?

3 years ago 397

தமிழ் மற்றும் மலையாளம் திரைப்பட உலகில் முன்னணி கதநாயகர்களுடன் நடித்த கனிகா, சீரியல் பக்கம் தனது கவனத்தை திருப்பியிருக்கிறார். 

பிரபல இயக்குநர் மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவான பைவ் ஸ்டார் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். 

வரலாறு படத்தில் நடிகர் அஜீத்துக்கு ஜோடியாக நடித்த அவர், எதிரி, ஆட்டோகிராப் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து முத்திரை பதித்தார். தமிழைப் போலவே மலையாள திரைத் துறையிலும் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.


மம்முட்டி, ஜெயராம் ஆகியோருடன் நடித்தால் தமிழ், மலையாளத்தை கடந்து தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

பின்னர், தமிழ் திரைப் படங்களில் வாய்ப்பு குறைந்ததையடுத்து மலையாள திரைப்படங்களில் மட்டும் கவனம் செலுத்திய அவர், சிறிது காலம் திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார். 

திருமணமான பிறகு மீண்டும் மலையாள படங்களில் நடித்த கனிகா, தமிழ் திரையுலகிலும் வாய்ப்பு கிடைத்தது. நாயகியாக இல்லாமல் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். விஜய் சேதுபதி, விக்ரம் ஆகியோரின் படங்களிலும் லேட்டஸ்டாக நடித்துள்ளார்.

சமூகவலைதளங்களிலும் கனிகா ஆக்டிவாக உள்ளார். தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ முதல் கவர்ச்சியான புகைப்படங்கள் வரை விதவிதமாக இன்ஸ்டாகிராமில் பதிவிடுகிறார். 

அண்மையில் பனியன் மற்றும் வேட்டியில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட அவர், கப்பலில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தையும் ரசிகர்களுக்காக பதிவிட்டு குஷிப்படுத்தினார்.

திரைப்படங்களில் இவர் ஏற்று நடித்த பெரும்பாலான கதாப்பாத்திரங்கள் ஹோம்லி கேர்ளாகவும், அமைதியான பெண்ணாக இருப்பது போலவும் இருந்தது. சில படங்களில் மட்டுமே கவர்ச்சியாக நடித்திருந்தார். 

குறிப்பாக மலையாள படங்களில் கேரக்டருக்கு தகுந்தாற்போல் கவர்ச்சி காட்சிகளில் நடித்தார். ஆனால், சமூக வலைதளங்களில் திரைப்படங்களை விஞ்சும் அளவுக்கு கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார். அவரின் ஒவ்வொரு புகைப்படங்களும் பல லட்சம் பார்வைகளை பெற்று வருகிறது.

இந்நிலையில், திரைப்படங்களைக் கடந்து தற்போது சீரியலிலும் கனிகா கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். சின்னத்திரை என்பது அவருக்கு புதிதல்ல. ஏற்கனவே தங்கவேட்டை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். திருவிளையாடல் என்ற சீரியலிலும் நடித்துள்ளார்.

சன்டிவியில் கோலங்கள் தொடர் மூலம் பிரபலமடைந்த திருச்செல்வம், புதிய தொடர் ஒன்றை சன் தொலைக்காட்சியில் இயக்குகிறார். 

அந்த தொடரில் கனிகா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். லாக்டவுன் முடிந்து சீரியல்களின் படப்பிடிப்பு தொடங்கியிருப்பதால், விரைவில் புதிய தொடர் குறித்த முழுமையாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...