சமந்தாவை தொடர்ந்து புதிய நோயினால் பாதிக்கப்பட்ட நடிகை..

2 years ago 429

நடிகை சமந்தா முக்கியமான ஒரு நோயினால் பாதிக்கப்பட்டு வெளியில் வர முடியாமல் தவித்து வருகிறார். தற்பொழுது மீண்டும் அந்த வரிசையில் மற்றொரு நடிகை இப்படி ஒரு சிக்கல் இருப்பது அனைவருக்கும் வருத்தத்தை அளிக்கிறது. 

முன்னணி நடிகைகளுக்கு இதுபோன்ற புதுப்புது நோய் பாதிக்கப்படுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலப்பதிகாரம் எனும் படத்தில் மூலம் நமக்கு மிகவும் அறிமுகமான நடிகை மம்தா மோகன்தாஸ். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் எனும் பல மொழிகளில் நடித்துள்ளார். 

மலையாளத்தின் விருப்பமான நடிகை என பெயர் வாங்கியவர். இவர் சிறந்த நடிகைக்கான விருது மற்றும் பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார். மேலும் இவர் இதுவரை 50 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.

இதற்கிடையில் இவர் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட போது அதை தைரியமாக எதிர்கொண்டு போராடியவர். இந்த நோயை எதிர்கொண்டது மூலம் அனைவரின் தைரியத்தையும், தன்னம்பிக்கையும் உயர்த்திய நபராக இருந்தவர் மம்தா மோகன்தாஸ். இவருக்கு குடும்பப் பிரச்சனை காரணமாக விவாகரத்து ஏற்பட்டது. இது எல்லாத்தையும் தாண்டி தற்போது வெற்றிகரமாக நடித்து வருகிறார்.

ஆனால் தற்பொழுது மம்தா மோகன்தாஸ் தனது புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டு நான் நிறமிழப்பு நோயினால் பாதிக்கப்பட்டு வருகிறேன். அதற்கு ஆட்டோ இம்யூன் என்கிற தன்னுணர்வு நோய் என்று சொல்லி இருக்கிறார். ஏற்கனவே புற்று நோயால் பாதிக்கப்பட்டு மன வலிமையுடன் போராடி வந்த நிலையில் தற்போது புதிய நோய்க்கு ஆளாகியுள்ளார்.

இந்த நோயின் விளைவால் தன்னுடைய முகத்தோற்றம் மாறிவிடும் மற்றும் தனது நிறத்தை கொஞ்சம் கொஞ்சமாக இலக்க நேரிடும். பின்பு இது உடலின் எந்தப் பகுதியின் சருமத்தையும் பாதிப்படையச் செய்ய வைக்கும். இவர் தற்போது வெளியிட்ட புகைப்படத்தின் மூலம் முகம் மாறி இருக்கிறது என்பது நன்றாக தெரிகிறது.

ஏற்கனவே இவர் பல பிரச்சினைகளை கடந்து நடிக்க வந்த நிலையில் தற்போது புது நோயினால் பாதிக்கப்பட்டு வருவது மிகவும் வருத்தம் அளிக்கிறது. மேலும் இதிலிருந்து நான் மீண்டும் மறுபடியும் நடிக்க வருவேன் என்று மன தைரியத்துடன் சவால் விட்டு விடுகிறார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...