சம்மதம் இல்லாமல் முத்தம் கொடுத்த கமல்? இயக்குநரிடன் கெஞ்சிய நடிகை ரேகா!

3 years ago 518

தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ரேகா. தன்னுடைய சினிமா கெரியரை 15 வயதில் ஆரம்பித்த ரேகா முன்னணி இயக்குநர்கள் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார்.

தற்போது 50 வயதான நடிகை ரேகா கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 4ல் பங்கேற்றார். இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் முதல் சீசனில் கலந்து கொண்டார்.

அந்தவகையில் இரண்டாம் படத்தில் இயக்குநர் பாலச்சந்தர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் நடித்த புன்னகை மன்னன் படத்தில் நடந்த சம்பவத்தை பகிர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

பிரபல தனியார் இணையதளத்திற்கு சமீபத்தில் அளித்த பேட்டியளித்த நடிகை ரேகா, புன்னகை மன்னன் படத்தில் நடிகர் கமல் எனக்கு முத்தம் கொடுக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.

அந்த முத்தகாட்சி குறித்து இயக்குநர் பாலச்சந்தரும், கமல்ஹாசனும் கூறவேயில்லை. என் சம்மதம் இல்லாமல் அந்த காட்சி எடுத்ததை இயக்குநரிடன், “என் தந்தை பார்த்தால் திட்டிவிடுவார்கள் என்று கூறினேன்.

இதனால கமல்ஹாசனும், இயக்குநரும் என்மேல் கோபப்பட்டாலும் என் விருப்பமில்லாமல் எடுத்தது தவறு என்று கூறினேன். ஆனால் அந்த காட்சியை தியேட்டரில் பார்க்கும் போது ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தது எனக்கு மகிழ்ச்சியளித்தது என்று கூறியுள்ளார்.

https://twitter.com/Sangeeth_I/status/1231507632881651714


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...