சர்ச்சை நடிகையின் பாதுகாவலர் மீது பலாத்கார வழக்கு... பரபரப்பு...!

3 years ago 339

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். தமிழில் ஏ.எல்.விஜய்  இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் தலைவி என்ற படத்தில் கங்கனா நடித்து முடித்துள்ளார். 

கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி படம் வெளியியாகியிருக்க வேண்டிய நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில் கங்கனா ரணாவத்தின் பாதுகாவலர் பாலியல் புகாரில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கங்கனா ரணாவத்தின் பாதுகாவலரான குமார் ஹெக்டே என்பவர் மீது மும்பையில் உள்ள டி.என்.நகர் காவல் நிலையத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். 

அதில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் குமார் ஹெக்டே வாக்குறுதி அளித்ததாகவும், அதைப் பயன்படுத்தி தன்னை பலமுறை வலுக்கட்டயமாக பாலியல் உறவு கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி என் வீட்டில் இருந்த ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றதாகவும் அவர் மீது புகார் அளித்துள்ளார். 

இதையடுத்து மும்பை போலீசார் குமார் ஹெக்டே  மீது 376, 377 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குமார் ஹெக்டே அந்த பெண்ணுடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததாகவும், தற்போது இருவரும் பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...