சர்ச்சைகளை தவிர்க்க ‘கர்ணன்’ படக்குழு எடுத்த அதிரடி முடிவு

3 years ago 217

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இதில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, லால், கவுரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இதுவரை வெளியான இப்படத்தின் பாடல்களும், டீசரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்ததோடு மட்டுமின்றி, சர்ச்சைகளிலும் சிக்கியது. குறிப்பாக பண்டாரத்தி என்ற பாடலால் உருவான சர்ச்சையால், அதனை மஞ்சனத்தி என மாற்றிவிட்டனர்.

படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் இதற்கு மேல் சர்ச்சைகளில் சிக்கிவிட வேண்டாம் என்பதற்காக, கர்ணன் படக்குழு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாம். அதன்படி, படத்தின் டிரெய்லரை வெளியிட வேண்டாம் என முடிவு செய்துள்ளார்களாம்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...