சாப்பாட்டுகே கஷ்டப்படும் இயக்குனர் சங்கரின் உதவியாளர்... பரிதாப நிலை!

1 year ago 152

தமிழ் சினிமாவில் 90க்கு பிறகு அறிமுகமான இயக்குநர்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குநர் ஷங்கர்.

பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த இயக்குநர் ஷங்கர், படத்துக்குப் படம் பிரம்மாண்டத்தை காட்டி வருகிறார்.

ஆக்ஷன் கிங் ஆர்ஜூன் நடித்த ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஷங்கர். இவர் இதுவரை 13 படங்களை இயக்கி உள்ளார். 

அவற்றில் ஒரு சில படங்கள் மட்டுமே வணிகரீதியாகத் தோல்வி அடைந்தன. இவரின் படங்களில் பெரும்பாலானவை சமூக விழிப்புணர்வு படங்களாகவே இருக்கும்.

ஷங்கரின் இயக்கத்தில் கடைசியாக 2.0 திரைப்படம் வெளியானது. எந்திரன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2.0 திரைப்படம் உருவாக்கப்பட்டது. 

இதில் எமிஜாக்சன், அக்ஷய் குமார் ஆகியோர் நடித்திருந்தனர். செல்போனால் ஏற்படும் பாதிப்பு குறித்து அழகாக எடுத்துக்கூறியிருந்தார். 

2018ம் தேதி வெளியான இத்திரைப்படத்திற்கு பிறகு இன்னும் எந்த படத்தையும் அவர் வெளியிட வில்லை.

தற்போது ஷங்கர் இந்தியன் 2, ராம்சரணின் 15வது படமான ஆர்சி 15 திரைப்படம் என ஒரே நேரத்தில் இரண்டு படத்தை இயக்கி வருகிறார். 

இதில் ஆர்சி15 படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து போஸ்ட் ப்ரோடக்ஷன் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தியன் 2 திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற முடிவில் இருப்பதால் ஒவ்வொரு நாளும் இந்தியன் 2 படத்தின் மீதான எதிர்பாப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில்,இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து காதலன், ஜீன்ஸ், இந்தியன் படங்களில் பணியாற்றிய செல்வேந்திரன் அடுத்த வேளை உணவுக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார். 

நடிகை லட்சுமி ராயை வைத்து ஒரு காதலன் ஒரு காதலி படத்தை இயக்கிய இவர், இயக்குநர் ஆகவேண்டும் என்ற ஆசையில் ஊரைவிட்டு ஓடிவந்துள்ளார்.

இவர் இயக்கிய முதல் படம் தோல்வி அடைந்தால்,வாழ்க்கையை வெறுத்து அலைந்து கொண்டு இருக்கிறார். ஷங்கரைப் பார்த்து உதவி கேட்க மனம் வராததால், சாப்பாட்டுக்கே வழியின்றி பட்டினியுடன் வாய்ப்பை தேடி அலைந்து வருகிறார். 

எப்படியாவது ஒரு படத்தை இயக்கி சாதித்த பிறகே சொந்த ஊர் சென்ற பிடிவாதத்தில் இருக்கிறார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...