”சாமி... சாமி..” ஒரேடியாக கும்பிடு போட்ட ராஷ்மிகா..!!

1 year ago 156

கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‘புஷ்பா: தி ரைஸ்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 

குறிப்பாக ‘சாமி சாமி’ என்கிற பாடல் பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. ஒட்டுமொத்த இந்தியாவும் பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்டது. 

இந்நிலையில் சமூகவலைதளத்தில் உரையாடிய ராஷ்மிகாவிடம், ‘சாமி சாமி’ பாடலுக்கு நடனமாடச் சொல்லி ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு மறுத்துவிட்ட ராஷ்மிகா, அந்த பாடலுக்கு போதும் போதும் என்கிற வகையில் பலமுறை ஆடிவிட்டேன். 

இனிமேல் அப்பாடலுக்கு நடனமாட்டேன். ரசிகர்களுக்கு பிடித்த வேறு விஷயங்களை செய்ய விரும்புகிறேன் என்று பதில் அளித்துள்ளார்.

புஷ்பா படத்தில் ராஷ்மிகா சாமி சாமி பாடலுக்கு ஆடியதை விடவும், பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தான் அதிகமாக ஆடினார். 

கோவிந்தா, சல்மான் கான், மாதுரி திக்‌ஷீத், வருண் தவன், சித்தார்த் மல்ஹோத்ரா என்று பிரபல பாலிவுட் நடிகர்களுடன் சேர்ந்து, இந்த பாடலுக்கு ராஷ்மிகா நடனமாடியுள்ளார். அந்த வீடியோக்கள் இன்றும் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

 

கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‘புஷ்பா: தி ரைஸ்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...