தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. அருண் பிரசாத் என்பவர் நாயகனாக நடித்து வரும் இந்த சீரியலில் நாயகியாக நடித்து வந்தவர் ரோஷினி ஹரிப்ரியன். இந்த சீரியலில் இவருடைய கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
சூர்யாவின் சூப்பர் ஹிட் படத்தை தவற விட்ட பாரதி கண்ணம்மா ரோஷினி - சீரியலை விட்டு வெளியேற இதுதான் உண்மை காரணம்
சீரியல் தொடர்ந்து விருவிருப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் திடீரென சமீபத்தில் இவர் சீரியலில் இருந்து விலகினார்.
இவர் சீரியலை விட்டு வெளியேறி இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வரும் நிலையில் இயக்குனர் உண்மையான காரணத்தை தெரிவித்துள்ளார்.
அதாவது தமிழ் சினிமாவில் வெளியான சூர்யாவின் ஜெய்பீம் படத்தில் செங்கேணி என்ற கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க ரோஷினியை தான் படக்குழு அணுகியுள்ளது. அதேபோல் சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடிக்கவும் ரோஷினியை படக்குழு அணுகியுள்ளனர்.
சீரியலில் பிசியாக நடித்து வந்ததால் காரணத்தினால் இந்த இரண்டு படங்களையும் அவர் நழுவ விட்டுள்ளார். படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பிறகு மிகவும் வருத்தப்பட்டு தான் இனியும் வெள்ளித்திரை வாய்ப்பை நழுவ விடக்கூடாது என முடிவு செய்து சீரியலில் இருந்து விலகிக் கொண்டதாக அந்த சீரியலில் இயக்குனர் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.