சாலை விபத்தில் பலியான பிரபல சீரியல் நடிகை - ரசிகர்கள் அதிர்ச்சி!

2 years ago 297

பிரபல சீரியல் நடிகை  விபத்தில் உயிரிழப்பு

மகாராஷ்டிராவை சேர்ந்த நடிகை கல்யாணி குராலே ஜாதவ்(32), மராத்தி மொழி டிவி தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர். 

கோலாபூரில் தனது வசிப்பிடத்திற்கு அருகே உள்ள ஹலோந்தி என்ற பகுதியில் உணவகம் ஒன்றை கடந்த சில நாள்களுக்கு முன்னர் தான் புதிதாக திறந்துள்ளார்.

படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் இவர் தனது உணவகத்திற்குச் சென்று வாடிக்கையாளர்களைக் கவனிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். 

இந்நிலையில், உணவகத்தில் இருந்து கல்யாணி தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது சங்கிலி - கோலாபூர் நெடுஞ்சாலையில் பயணித்த போது ஒரு டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானார். 

இதில் கல்யாணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் திரை உலகினர்மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...