சித்தி 2 சீரியலில் ராதிகாவுக்கு பதிலாக நானா? பிரபல நடிகை விளக்கம்

3 years ago 255

கடந்த 1999 ஆம் ஆண்டு பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தொடர் தான் சித்தி, நடிகை ராதிகா மற்றும் சிவகுமார் நடித்த இந்த தொடர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம்.

மேலும் 2020-ல் சித்தி 2 சீரியல் மீண்டும் ஆரம்பமானது, இந்த சீரியல் ஆரம்பமான சில மாதங்களிலே கொரோனா பரவியதால் இந்த சீரியல் நிறுத்தப்பட்டது.

இதனிடையே ஒரு சில கதாபாத்திரங்களின் மாற்றங்களுடன் மீண்டும் இந்த சீரியல் தொடங்கப்பட்ட நிலையில், நடிகை ராதிகா இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் நடிகை ராதிகாவின் கதாபாத்திரத்தில் அடுத்து யார் நடிக்கப்போவது என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது, அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என கூறப்பட்டது.

அந்த வகையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் ராதிகாவின் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. ஆனால் அவரோ அந்த கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை என மறுத்துவிட்டாராம்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...