சித்ரா பற்றி உருக்கமாக பதிவிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை..

3 years ago 290

சின்னத்திரையில் சமீபத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒரு இழப்பு பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த விஜே சித்ராவின் தற்கொலை தான்.

மரணத்திற்கு என்ன காரணம் என்று இன்னும் தெரியாமல் மறைந்துவிட்டது அந்த செய்தி. தற்போது அவருக்கு பதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிகை காவியா நடித்து வருகிறார்.

முல்லை கதாபாத்திரத்தில் சித்ராவின் இடத்தை யாராலும் முழுவதும் நிரப்ப முடியாது என்று ஆரம்பத்தில் கூறியபடி முல்லையாக நடிக்க ஆரம்பித்தார் நடிகை காவியா.

தற்போது முல்லை பற்றிய சில நெகிழ்ச்சியான தருணத்தை பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை காவியா.

அவர் கூறுகையில், முல்லை. நான் பதிவிடும் முதல் போட்டோ. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் உருவாக்கப்பட்டு பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு கேரக்டர். தமிழ் கலாச்சாரம், பண்பாட்டில் பிறந்து வளர்ந்து தனக்கென தனி அம்சங்களையும், அதற்கு பொருத்தமான உடல் மொழியையும் கொண்ட ஒரு தமிழ் பெண் கேரக்டர்.

அழகான பெண்களில் ஒருவரான விஜே சித்ராவை இந்த கதாபாத்திரத்தில் தேர்வு செய்ய குழுவினர் தீர்மானித்தனர். தனிப்பட்ட முறையில் நான் அவரை சந்தித்ததே கிடையாது. 

அவருடன் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில் தூரத்தில் அவரை பார்த்தேன். அப்போது நான் இந்த தொலைக்காட்சிக்கு புதிது என்பதால் அது அவர்தானா என்று எனக்குத் தெரியவில்லை.

அவரோடு நேரம் செலவழிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவர் தன்னுடைய வாழ்க்கையை சிறப்பாக செதுக்கி பலருக்கும் உந்து சக்தியாக இருந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். அவருடைய கதைகள் எனக்கு ஊக்கமாக இருந்தது. முல்லை கதாபாத்திரத்துக்கு 100% நியாயமாக இருந்திருக்கிறார்.

ஆனால் அனைத்து மனிதர்களின் வாழ்க்கையும் ஒரே மாதிரி முடிகிறது. அவர் எப்படி வாழ்ந்தார். எப்படி இறந்தார் என்பதே ஒருவரிலிருந்து ஒருவருக்கு மாறுபடுகிறது. அவர் முல்லையாக வாழ்ந்தார்.

மேலும், முல்லை ரசிகர்கள் எனது ரசிகர்களை நன் எப்போது ஏமாற்ற மாட்டேன். என்னுடைய உயிர், கனவு, உலகம், தொழில் என அனைத்திலும் நடிப்பு தான்.

என்னை ஆரம்பித்தில் இருந்து ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று நெகிழ்ச்சியோடு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...