சித்ராவை தொடர்ந்து பிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... அதிர்ச்சியில் ரசிகர்கள்

3 years ago 511

கன்னடம் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட, நடிகை ஜெயஸ்ரீ ராமையா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் பிரபலங்கள் பலரும், பிக்பாஸ் போன்ற ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மக்களின் மனதில் இடம்பிடித்து திரைத்துறை வாய்ப்புகளை கைப்பற்ற நினைக்கின்றனர். 

அந்த வகையில் கடந்த ஆண்டு நடந்த கன்னடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு விளையாடுவர் ஜெயஸ்ரீ ராமையா.

இவருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்ற பிரபலங்களுக்கு பட வாய்ப்புகள் கிடைத்தும், இவருக்கு எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. 


இதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த ஜெயஸ்ரீ ராமைய்யா, அதற்காக சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.

அதே நேரம், தற்கொலை குறித்து அவர் முகநூல் பக்கத்தில் பதிவிட்டதை பார்த்து, கன்னட நடிகர் சுதீப் சமாதானம் செய்து, தற்கொலை உணர்வில் இருந்து வெளிக்கொண்டு வர உதவியுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரும் இருந்து தன்னை தனிமை படுத்தி கொண்டு, ஆசிரமம் ஒன்றில் வசித்து வந்துள்ளார் ஜெயஸ்ரீ.


குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பல முறை போன் செய்த போதிலும், அதனை ஜெயஸ்ரீ எடுக்காததால், ஆசிரமத்திற்கு போன் செய்து விசாரித்துள்ளனர்.

பின்னர் ஜெயஸ்ரீ தங்கி இருந்த, அறையை சோதனையிட்ட போது அங்கு அவர் தூக்கில் தொங்கியபடி காணப்பட்டார். 

சமீபத்தில் தான் மன அழுத்தம் காரணமாக நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரை தொடர்ந்து மற்றொரு இளம் நடிகை தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மற்றும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...