சினிமா ஹீரோயினான விஜய் டிவி சீரியல் நடிகை... படங்களை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி!

3 years ago 215

நடிகை ரச்சிதா மகாலட்சுமி தமிழ் தொலைக்காட்சி உலகில் பிரபலமானவர். சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் 2 போன்ற புகழ்பெற்ற சீரியல்களில் முக்கியத்துவம் பெற்ற கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ள இவர், ஓரிரு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் ரச்சிதா மகாலட்சுமி ஒரு கன்னடப் படத்தில் நடிக்கிறார். இதனால் அவர் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து விலகுவதாகவும் தகவல்கள் வெளியாகின. 


இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதற்கிடையே தான் நடித்து வரும் கன்னட திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து சில படங்களைப் பகிர்ந்துள்ளார். இந்த படத்திற்கு 'ரங்கநாயக' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பார்த்த ரச்சிதாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குருபிரசாத் இயக்கும் இந்தப் படத்தில், நடிகர் ஜக்கேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...